...
செய்திகள்

மட்டக்களப்பு நகர்- அருள்மிகு அரசடிப் பிள்ளையார் திருக்கோயில் 

மட்டுமாநகர் தனிலே வீற்றிருக்கும் கணபதியே
ஆட்கொண்டு எங்களுக்கு நல்வாழ்வைத் தருவாய் ஐயா
கேட்ட வரம் தந்தெமக்கு நல்ல வழி காட்டி நின்று 
சீர்மைமிகு நல்வாழ்வு வாழவழி தருவாய் ஐயா
கிழக்கிலங்கை கோயில் கொண்ட சிவனாரின் புத்திரனே
நிம்மதியாய் நாம் வாழ ஏற்ற வழி தருவாய் ஐயா 
அருகினிலே நீயிருந்து அணைத்தெம்மைக் காத்து நின்று
மனவமைதி தந்தெமக்கு வாழவழி தருவாய் ஐயா 
வளங்கொண்ட திருநகரின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையா யிருந்தெமக்குக் காப்பினையே தருவாய் ஐயா 
வழிகாட்டி நீயிருந்து நல்லவழி காட்டி நின்று 
ஏற்றமுடன் நாம் வாழ உரிய வழி தருவாய் ஐயா 
கலங்கி நிற்போர் மனக்கவலை போக்கிவிடும் திருமகனே
காலவெள்ளம் அள்ளிவரும் துயரண்டா நிலையினையே தருவாய் ஐயா 
மனச்சாட்சி குன்றாத மனநிலையை வழங்கி நின்று
பெருமை மிகு மனத்தினராய் வாழ வழி தருவாய் ஐயா 
பஞ்சமா பாதகங்கள் தடுத்தருளும் பிள்ளையாரே
பாதகர்கள் கொடுமைகளைத் தடுக்கும் பலம் தருவாய் ஐயா 
வெற்றியுடன் வாழ நல்ல பாதையினை வழங்கி நின்று 
என்றும் நிலைகுலையா நிம்மதியுடன் வாழ வழி தருவாய் ஐயா 
அரசடிப் பிள்ளையாரென்ற நாமம் கொண்ட பேரருளே
ஆறுதலாய் நாம் வாழவுன்னருளைத் தருவாய் ஐயா 
இடையூறு செய்வோரை இல்லாது செய்து நின்று 
இன்பம் நிறை வாழ்வு வாழ வழி தருவாய் ஐயா. 
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen