...
செய்திகள்

மட்டக்களப்பு நகர்- அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் திருக்கோயில்

 
மட்டுமாநகர் மத்தியிலே கோயில் கொண்ட மாமணியே 
மதிநெறி நின்று வாழ நல்லருள் தந்திடுவாய்
கதி நீயேயென்றுன் பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு 
நலந்தந்து ஆறுதலை வழங்கிடவே வாருமைய்யா 
மட்டில்லா கருணை கொண்டு அமர்ந்தருளும் மாமணியே 
கிட்டிவரும் துன்பங்களை எட்டவே அகற்றிடுவாய்
நிம்மதியாய் வாழ உன் பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு 
நித்தமும் உறுதுணையை வழஙகிடவே வாருமைய்யா 
வீரகத்திப் பிள்ளையார் என்ற நாமம் கொண்ட மாமணியே 
வழிகாட்டி எம்மை நேர்வழியில் செலுத்திடுவாய்
துயரமில்லா வாழ்வடையவுன் பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு 
துணையாக இருந்து உயர்வளிக்க வாருமைய்யா
மனமுருகி தொழுது நிற்போர் மதியிலுறை மாமணியே 
மானமுடன் வாழும் நிலை நாமடைய வழியை நீ உறுதி செய்திடுவாய்
தலை தாழா உயர்நிலைக்கு உன்பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு துணையிருந்து அருள் 
வலிமை கொண்ட மனம் நிலைக்க உறுதிதர வாருமைய்யா
பெருமை மிகு தமிழ் மண்ணில் உயர்ந்து நிற்கும் மாமணியே 
தமிழ்க் கலைகள் எழுச்சி பெற ஏற்ற வழி காட்டிடுவாய்
நம்பிக்கை கொண்டுன் பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு 
பலமளித்து, முன் செல்ல வழியமைக்க வாருமைய்யா 
தளர்வின்றி முன்செல்ல வலிமை தரும் மாமணியே 
தரணியிலே தமிழர் புகழ் ஓங்க வழி செய்திடுவாய்
உறுதி கொண்ட எதிர்காலம் உறுதிபட உன் பாதம் பற்றி நிற்கும் எங்களுக்கு 
கேட்கும் வரமளித்து குறைதீர்க்க வாருமைய்யா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen