...
செய்திகள்

மட்டக்களப்பு- புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவில் 

தாயாக வீற்றிருந்து தரணியாளும் அன்னை பத்திரகாளி 
தயக்கமின்றி நம்பிடுவோம் நலமெமக்குத் தந்திடுவாள்
திசையெட்டும் அவளருளால் தீமைகள் அழிந்துவிடும் 
தொல்லையில்லா நல்வாழ்வைப் பெற்று நாம் மகிழ்ந்திடுவோம்
மட்டுமா நகரினிலே வீற்றிருக்கும் அன்னை பத்திரகாளி
தொட்டதெல்லாம் துலங்குகின்ற நல்வாழ்வைத் தந்திடுவாள்
கிட்டி வரும் பகை, கொடுமை எமையண்டாதிருந்து விடும்
நல்வாழ்வை நாம் பெற்று உய்தி பெற்று மகிழ்ந்திடுவோம்
புன்னைச்சோலை திருவிடத்தில் குடிகொண்ட அன்னை பத்திரகாளி 
புத்துணர்வு தந்து புது வாழ்வும் தந்திடுவாள்
புண்ணியம் தலை நிமிரும் துன்பங்கள் தொலைந்துவிடும்
புத்தெழுச்சி பெற்று நலம் பெற்று மகிழ்ந்திடுவோம்
ஆணவத்தை அழித்தொழித்து அறம் காக்கும் அன்னை பத்திரகாளி
ஆறுதலைத் தந்தெமக்கு அமைதியையும் தந்திடுவாள்
அமைதி கொண்ட மனத்தினராய் நிம்மதியாய் வாழ்வதற்கு 
அன்பு நிறையவளருளைப் பெற்று நாம் மகிழ்ந்திடுவோம்
நம்பி வரும் அடியவரின் நலன் பேணும் அன்னை பத்திரகாளி
மலர் தூவி வழிபடுவோர்க்கு நிறை வாழ்வைத் தந்திடுவாள்
பூரணை நன்னாளில் அருள் வேண்டி வழிபடுவோம்
கேட்டவரம் நிறைவு பெற்று நலன் பெற்று மகிழ்ந்திடுவோம்
மண்முனை தமிழரசின் மண்ணிலே நிலை பெற்ற அன்னை பத்திரகாளி
வரலாற்றில் தமிழ் இருப்பை உலகிற்குத் தந்திடுவாள்
வளம் பெற்று உரிமையுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வழிகிட்டும், நம்பிடுவோம்
அன்னையடி தொழுது நலம் பெற்று மகிழ்ந்திடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen