...
செய்திகள்

மட்டக்களப்பு- மயிலம்பாவெளி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் 

கிழக்கிலங்கை தமிழ் மண்ணில் கோயில் கொண்ட காமாட்சியம்மா
எங்கள் குறைகளைந்து நிறை அருள வரவேண்டும் தாயே 
வளங்கொண்ட மட்டு மாநிலத்திலுறைகின்ற அம்மா 
அருளளிப்பாய் எங்கள் நலன் காக்கவே தாயே 
தாயாக விருந்துலகைக் காத்தருளும் காமாட்சியம்மா 
தளராத மனவுறுதி தந்து பலமளிக்க வரவேண்டும் தாயே
திடங்கொண்டு நம் நிலத்தில் உறைகின்ற அம்மா 
உடனிருப்பாய் எங்கள் நலன் காக்கவே தாயே 
மயிலம்பா வெளியில் வந்தருளும் காமாட்சியம்மா
மனவலிமை தந்தெம்மை வாழவைக்க வரவேண்டும் தாயே 
மாற்றமில்லா நிம்மதியைத் தருகின்ற அம்மா 
காவல் செய்வாய் எங்கள் நலன் காக்கவே தாயே 
தூயமனம் கொண்டவளே எங்கள் காமாட்சியம்மா
தொல்லையில்லா வாழ்வளிக்க வரவேண்டும் தாயே 
தேடியுந்தன் தாள் பணிவோர் துயர் தீர்க்கும் அம்மா 
வளமளிப்பாய் எங்கள் நலன் காக்கவே தாயே 
அன்புடனே அரவணைக்கும் அன்னை காமாட்சியம்மா
ஆதரித்து, அரவணைத்து வாழவைக்க வரவேண்டும் தாயே 
நேர்மைவழி வாழ நம்மை வழிநடத்தும் அம்மா 
உடல் நோயும், உள நோயும் தீர்த்தருள்வாய் எங்கள் நலன் காக்கவே தாயே 
அழகு மிகு திருக்கோயில் உடையவளே காமாட்சியம்மா
அனைத்து நலன் நமக்களிக்க வரவேண்டும் தாயே 
இதயத்தில் உனையிருத்தி போற்றுகின்றோம் அம்மா 
நிலையான நிம்மதியைத் தருவாய் எங்கள் நலன் காக்கவே தாயே. 
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen