...
செய்திகள்

மட்டக்களப்பு- வாழைச்சேனை பேத்தாழை- அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில் 

வங்கக்கடலை மோதும் கிழக்கிலங்கைக் கரையினிலே வந்தமர்ந்தமர்ந்தான் திருமுருகன்
எங்கும் மங்களம் பொங்கிப் பெருகிட தருவான் அவனருளை
வடக்கே வாவியும் கிழக்கே பெருங்கடலும் அவன் கோயில் எல்லைகளாம்
வளங்கொண்டு வாழ வழி தந்தெம்மை அவன் வாழவைத்திடுவான்
மட்டக்களப்பு வளநிலத்தில் கோயில் கொண்ட திருமுருகன்
மகிழ்வுடனே வாழ்வதற்கு நேர் வழியைக் காட்டிடுவான்
மேன்மை கொண்டு நாம் வாழ ஏற்ற வழியவன் தருவான்
மேதினியில் வளம் பெற்று நம்மை அவன் வாழவைத்திடுவான்
வாழைச்சேனை வளவூரில் வீற்றருளும் திருமுருகன்
வாட்டமில்லா வாழ்வுக்கு துணையாக இருந்திடுவான்
எதிர்த்து வரும் கொடியவர்கள் இல்லாதொழித் திடுவான்
சூரனை வதம் செய்தது போல் தீயவர்களைத் தொலைத்திடுவான்
ஆனிஉத்தர நன்னாளில் தீர்த்தமாடும் திருமுருகன்
ஆனந்தமாய் நாம் வாழ அவனருளைத் தந்திடுவான்
துன்பங்கள் போக்கி துயரங்கள் நீக்கி தூயவள வாழ்வுக்கு துணையாகவிருந்திடுவான்
துணிவாக நாம் வாழ வழியமைத்து உறுதி செய்வான்
வங்கக்கடலிலே தீர்த்தமாடும் திருமுருகன்
வழுவில்லா நல்வாழ்வை எங்களுக்குத் தந்திடுவான்
நழுவிச் செல்லும் நலன்களெல்லாம் நமை வந்து சேரச் செய்வான் 
நாட்டினிலே நம்முரிமை உறுதி செய்து வாழவைப்பான்
தெய்வத் தமிழ் மொழியின் காவலனாய் அமர்ந்த திருமுருகன்
தொல்லையின்றி நாம் வாழ துணையையும் தந்திடுவான்
அகதியென்றும், அனாதையென்றும் அவதியுறும் நிலையகற்றி
எதிர்காலம் நலம் பெருக அருள் செய்து உயர்த்திடுவான்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen