மலையகம்

மட்டுகலை தமிழ் வித்தியாலயதில் மாபெரும் மலையக பாரம்பரிய கலாசார ஊர்வலம்

மட்டுகலை தமிழ் வித்தியாலயம் ஒழுங்கு செய்துள்ள மலையக கலாசார பாரம்பரிய ஊர்வலம் எதிர்வரும் 08ம் திகதி மட்டுகலையில் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலத்தில் பாரம்பரிய கலைகளான தப்பு ,உடுக்கு ,கோலாட்டம் ,கும்மியாட்டம் ,மயிலாட்டம் ,செம்பு நடனம் ,புலியாட்டம் ,சிலம்பாட்டம் ,காவடியாட்டம் ,சுலகா ட்டம்,காமன்கூத்து ,பொன்னர்சங்கர் போன்ற பாரம்பரிய மலையக கலாசார நடனங்கள் இடம்பெ றவிருப்பதோடு,திருவள்ளுவர்,ஞானசம்பந்தர்,ஔவையார் போன்ற எம் மூத்த தமிழ் சான்றோர்களுக்கு சிறப்பு சப்ரங்கள் செய்து வீதி உலா இடம் பெறவிருப்பதாக பாடசாலையின் அதிபர் திரு.பெரியசாமி பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் இந்த பாரம்பரிய கலை ஊர்வல நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் அமர ஸ்ரீ பியதாச உட்பட ,தமிழ் கல்வி பணிப்பாளர்கள்,ஆலோசகர்கள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்களோடு பிரதேச பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

Related Articles

34 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button