செய்திகள்

மட்டு. மாமாங்கபிள்ளையார் ஆலயம் 14 நாட்களுக்கு பூட்டு; ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்.

மட்டக்களப்பு மாமாங்கபிள்ளையார் ஆலயத்தை14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுதனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஜ்.வாசுதேவன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மண்முனை வடக்கிற்கான கொரோனா செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சுகாதார சட்டத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆலயஉற்சவம் தொடர்பாக கடந்த கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சட்டத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இவ் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனனையடுத்து ஆலையத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும். உற்சவத்தில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்பத்துவதாகவும் தீர்மானிகக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button