செய்திகள்

மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

தெதுரு ஓயாவில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

25, 35 மற்றும் 40 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button