மலையகம்

மண்சரிவால் மூடப்பட்டிருந்த ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி திறப்பு

மண்சரிவால் மூடப்பட்டிருந்த ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் நேற்று இரவு முனடனெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 13ம் திகதி இந்த வீதியின் சுமார் 45 மீற்றர் பகுதி, அருகில் இருந்த 5 வீடுகளுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்தினுள் சரிந்து வீழ்ந்த காரணத்தால் குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் , தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் படி மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் புதிதாக வீதியொன்றை அமைத்து வாகன போக்குவரத்துக்காக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் 8 தொன் எடையுடைய கனரக வானங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , இலகுரக வாகனங்களுக்கு எவ்வித தடைகளும் இல்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், கனரக வாகனங்களுக்காக தொடர்ந்தும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு நோர்வுட் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button