மலையகம்

மண்சரிவு அவதானம் உள்ள தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க நடவடிக்கை

பண்டாரவலை – லியன்காவலை தோட்டம் பலகல பிரிவில் மண்சரிவு அவதானம் காரணமாக 26 குடும்பங்கள் உட்பட மேலும் சில குடும்பங்கள் குறித்த இடத்தில் இருந்து இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மலையில் இருந்து பாரிய கற்கள் குடியிருப்புளை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த அச்சத்தில் வாழும் தோட்ட மக்களுக்கு குறுகிய காலத்தில் வீடுகளை அமைக்க தோட்டத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்து.

ஒதுக்கப்பட்ட காணியில் வீடுகளை கட்ட தேவையான நடவடிக்கைகள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இச் சந்தர்பத்தில் இராஜாங்க அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிலமைகளை கேட்டு அறிந்துக் கொண்டார்.

இதன் போது தோட்ட தலைவர்களும் பாதிப்பை எதிர்நோக்கும் மக்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button