மண்டைத்தீவில் சோகம் – இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

uthavum karangal

யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸார் இதனை எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினர்.

இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த 7 வயதான சாவிதன் மற்றும் ஐந்து வயதான சார்வின் ஆகிய
சகோதரர்களே நீர் சேமிப்புப் கிடங்கினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த சிறுவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்