...
செய்திகள்மலையகம்மாத்தளை

மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் மரம் வீழ்ந்ததில் 15 வயது சிறுவன் மரணம்.

மாத்தளை – உன்னஸ்கிரிய பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (19) முற்பகல் 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உன்னஸ்கிரிய பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர், மரமொன்றை வெட்டுவதற்காக இன்று காலை சென்றுள்ளனர்.

மரம் வெட்டுவை பார்வையிடுவதற்காக சென்ற வேளையிலேயே, மரம் சரிந்து, சிறுவனின் மீது வீழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.

மரம் வீழ்ந்ததில் சிக்குண்ட சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதான தனுஷன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மாத்தளை எல்கடுவ தமிழ் பாடசாலையில் 10ம் தரத்தில் இவர் கல்வி பயின்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை இவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen