...
செய்திகள்

மதுரை ஆதினத்தின் மறைவுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரங்கல்.

மதுரை ஆதினத்தின் மறைவுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரங்கல்.
தமிழகத்தின் மிக தொண்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதின மடத்தின் 292 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகளின் மறைவு சைவ சமயத்திற்கும் பேரிழைப்பாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது இரங்கல் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது இரகங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது.
சைவ சமயம்,மற்றும் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க ஆதினர் அயராது உழைத்தவராவார்.

 நுவரெலியாவில் வேளாளர் தொண்டை மண்டல குடும்பத்தில் பிறந்த இவர் தனது12வது வயதில் தமிழகம் சென்று அங்கு பல ஆண்மீகப்பணிகளை மேற்கொண்டவர் என்பது சிறப்பு அம்சமாகும்.
மேலும் 10க்கும் மேற்பட்ட பிற மொழிகளை எழுத,படிக்க பண்டித்தியம் பெற்ற இவரின் மறைவு சைவ சமயத்திற்கும்,  எமக்கும் பேரிழப்பாகும்.

மேலும் அன்னாரின் இழப்பாபால்  வாடும் மதுரை ஆதின மடத்தினர் மற்றும் சைவ சமய சகோதர, சகோதரிகள் அனைவரின் துக்கத்தில் பங்குகொள்வதாக  இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில்  மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen