மலையகம்

மதுவற்ற தீபாவளி..சாத்தியமா?

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர்.விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தீபாவளி பண்டிகையை மலையக மக்கள் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் சிறப்பாகவே கொண்டாடி மகிழ்வார்கள்.
மலையக மக்கள் பண்டிகைகள்,விழாக்கள்,விரதங்கள், சடங்குகள் என பல வற்றிற்கு முகம் கொடுத்தாலும் தீபாவளி பண்டிகைக்கு இவர்கள்கொடுக்கும் முக்கியத்துவம் வித்தியாசமானது.
உண்பதும் உழைப்பதும் என்ற இயந்திர வாழ்க்கைக்கு அப்பால் தங்கள் உழைப்பால் பெற்ற ஊதியத்தில் தமது குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே புதிய ஆடைகளை பெற்று ,பச்சரிசி பலாகாரம் சுட்டு,பட்டாசு கொளுத்தி ,உற்றார் உறவினருடன உண்டு களித்து சந்தோசமடைவார்கள்.
தீபாவளி என்பது  தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்தல் என பொருள் படுகிறது.அதிகாலை எழும்பி எண்ணெய் தேய்த்து, நீராடி ,புத்தாடை அணிந்து, விளக்கேற்றி இறைவனை வழிபட்டு ஞானமாகிய ஒளியை அடைவதுதான் தீபாவளியின் தத்துவமாகும்.
இவ்வாறான தத்துவம நிறைந்த இந்த தீபத்திருநாள் இன்று எமது அறியாமையினாலும் பல் தேசிய கம்பனிகளின் சூழ்ச்சிகளாலும் புனிதம் கெட்டு எமது கலாசாரமே கேள்விக்குறியாக மாறி வருவதை வேதனையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மதுபாவனையால் ஏற்படக்கூடிய அல்லது மது பானத்துக்கு கொடுத்திருக்க கூடிய பொய்யான முக்கியத்துவத்தை ஆராய்ந்து பார்போம்.
தீபாவளி  என்பது குதூகலமானது.உற்றார் உறவினர்கள் வீடுகளுக்கு வருவதும் போவதும் சிறுவர்கள் ஓடி,ஆடி திரிவதும் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் அயலவர்கள் ஒன்றாக கூடுவதும்,அறுசுவை உணவுகளை பரிமாறி கொள்வதும் என இயற்கையாகவே கலைக்கட்டி இருக்கும்.இந்த அற்புதமான
சந்தோசம் நிறைநத அந்த சூழலுக்கு அசௌகரியம் நிறைநத கசப்பான,அருவருப்பான, நாற்றம் அடிக்கக்கூடிய குமட்டல் வரக்கூடிய ஏன் வாந்திவரக்கூடிய மதுபானத்தை கொண்டு வந்து குடித்து விட்டு அதனால்தான் சந்தோசம் வந்தது,சந்தோசம் வரும் என்ற முட்டாள்தனமான சிந்தனையை  நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..
தொற்றா நோய்களுக்கு பிரதான காரணமாக இருக்கக்கூடிய மனித ஆயூளைக் குறைக்கக்கூடிய மதுபானத்தை கொடிய விசம் போன்ற ஒரு பொருளை எங்கள் மீது அன்பு கொண்டு எங்கள் வீடுகளுக்கு வரும் எமது உறவினர்களுக்கு கொடுத்து உபசரித்து அவர்களின் ஆயூளை குறைக்கும் மோசமான வேலையை பெருமையாக நினைத்துக்கொண்டு செய்து கொண்டு இருக்கிறோம்.
இன்னும் சிலர் சந்தோசம் ,மகிழ்ச்சி போன்றவற்றிற்கு அர்த்தம் தெரியாமல் மதுபானம் இல்லாவிடாடால் தீபாவளி இல்லை அது இருந்தால் தான் “பண்”என அதற்கு விளம்பரம் செய்து சாராய கம்பெனிக்கு வக்காகாலத்து வாங்குவதையும் நாம் பார்க்கின்றோம்.
மேலும் தாம் சீரழிவது மட்டுமல்லாமல் தமது கள்ளகபடமற்ற  குழந்தைகளுக்கு அவர்களுக்கு முன் விருந்து உபசாரங்களில் பயன்படுத்துவதன் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை களுக்கு சாராயம் போன்ற மதுபான வகைகளை குடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி கொடுத்து விடுகிறோம்.வளர்ந்து பெரியவரானால் சந்தோசம் என்பது இதுதான் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்வும் நாமே காரணமாகி விடுகிறோம்.
தீபாவளி போன்ற சந்தோசமான நாட்களில் சாராயத்தை குடித்துவிட்டு இயல்பான நிலையிலிருந்து மாரி முகம் வெளிரி
வாய் நாற்றத்தூடன் சூழலுக்கும் மற்றவர்களுக்கும் இடையூராகவும் சிலர் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.இன்னும் சிலர் பிதுர்கடன் என்ற பெயரில் இறந்தவர்களுக்கு ,மனித இனத்தை அழித்து,குடும்பத்தை சீரழித்து ,வீண் செலவுகளை ஏற்படுத்திக எம்மை கடன் காரணாகமாக்கும்  மிக மோசமான பொருளை  புனித பொருளாக்கி படைக்கும், தீபாவளி கலாசாரத்திலேயே இல்லாத ஒன்றை செய்கின்றதையும் காண்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக தாம் கஸ்ட்டப்பட்டு உழைத்த பணத்தின் பெரும் பகுதியை சாராயகம்பனிககு கொடுத்து விட்டு ஏமாளியாக இருந்து காலம்பூராகவும் கடனாளியாக இருப்பதையும் விளங்கியும் விளங்காமல் இருக்கிறோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை விளங்கிக்கொண்டு இந்த முறை தீபாவளிக்கு  யார் தாம் சாராய கம்பெனிக்கு தமது உழைப்பினால் பெற்ற ஊதியத்தை கொடுக்க வில்லையோ ,அல்லது தாம் வழமையாக பாவிகும் மதுபானத்தின் அளவை குறைத்து அதிலிருந்து விடுபட முயற்சித்திருக்கிறார்களோ, யார் யார் தமது வீடுகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு மதுபானம் கொடுப்பது அவர்களை கொலை செய்வதற்கு சமம் என்று உணர்ந்து கொடுக்காமல் இருக்கிறார்களோ,யார் யார் தமது வீடுகளுக்கு மதுபானம் கொடண்டுவந்து அருந்துவதால் தமது பிள்ளைகள் அந்தப் பழக்கத்திற்கு இலகுவாக உள்வாங்கப்படுகிறார்கள் என்பதை உணர்கிரார்களோ ,மதூபானத்தால் ஒரு காலமும் சந்தோசம் ஏற்படாது என்பதை தெளிவாக புரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் மதுவற்ற தீபாவளி அல்லது மதுவற்ற மலையகம் உருவாகும்.இல்லாவிட்டால் ஆது வெறும் கோசமே.வெறும் கோசத்தை இடுவதை விட ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்னெடுத்து மதுபாவனையிலிருந்து எமது சமுதாயத்தையும் புனிதமான கலாசாரத்தையயும் மீட்டெடுப்போம்.
அ.ரெ.அருட்செல்வம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button