மலையகம்
மது அருந்திய 20 பேருக்கு ஏற்பபட்ட நிலை
நுவரெலியா – பூண்டுலோயா பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடையில் மது அருந்தியவர்கள் வாந்திபேதி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இன்று அந்த கடை மூடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது .
சுமார் 20க்கும் மேற்பட்டோர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருந்திய மதுவில் நச்சுத்தன்மை கலந்துள்ளது என சந்தேகித்து பூண்டுலோயா பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது.
இதன்போது சம்பவமிடத்திற்கு வந்து பொலிஸார் பூண்டுலோயா மதுபான கடையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.