ஆன்மீகம்

மத்திய மாகாணம்- மாத்தளை சுதுகங்கை- அருள்மிகு ஏழுமுகக் காளியம்மன் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

 

மாத்தளை மாநகர் எல்லையிலே வீற்றிருக்கும் தாயே
மாநிலத்தில் மகிழ்வுடனே வாழும் வழிதருவாய்
மருள் போக்கி இருளகற்றி வாழச் செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே

சுதுகங்கை நதிக்கரையில் கோயில் கொண்ட தாயே
சுதந்திரமாய் நாம் வாழ வழியமைத்துத் தருவாய்
மனவுறுதி தந்தெம்மை வாழச் செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே

மலைசூழ்ந்த வளநிலத்தில் உறைகின்ற தாயே
மனநிறைவு பெற்றென்றும் வாழ வழி தருவாய்
முன்னேறும் வழி தந்து வாழச் செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே

நம்பிவந்து தொழுது நிற்போர் நலன் காக்கும் தாயே
நிம்மதியை நிரந்தரமாய் பெற்று வாழ வழிதருவாய்
நெஞ்சமதில் அமைதியையே நிலைக்கச் செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே

கொடிய செயல், சிந்தனைகள் அகற்றிவிடும் தாயே
குற்றமில்லா மனத்தினராய் வாழ வழி தருவாய்
கரவு கொண்டோர் உறவுகளை விலகச் செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே

தேரேறிப் பவனி வரும் தூயவளே தாயே
திக்கெங்கும் திருக்கருணை பரவ வழி தருவாய்
முத்தமிழின் உரிமையினை உறுதி செய்வாய் அம்மா
ஏழுதிருமுகங்கள் கொண்டு எமையாளும் தாயே.

 

Related Articles

Back to top button