மலையகம்

மத்திய மாகாண ஆளுநரானார் ரெஜினோல்ட் குரே

புதிதாக ஏழு ஆளுநர்கள் இன்று (12) பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை புதிய ஆளுநர்களுக்கான பதவி பிரமாணம் இடம்பெற்றது.

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக வடமாகாண ஆளுநராக பதவி வகித்து வந்த ரெஜினோல்ட் குரே பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஹேமகுமார நாணயக்கார மேல் மாகாண ஆளுநராகவும், கே.சி.லோகேஸ்வரன் வடமேல் மாகாண ஆளுநராகவும், நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

தென் மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேரா பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன் எம்.பி.ஜயசிங்க, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.பீ.திசாநாயக்க ஊவா மாகாண ஆளுநராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

ஆளுநர்களுக்கான பதவிக்காலம் நிறைவுக்கு வந்த நிலையில் வடமாகாண ஆளுநராக கே.சி. லோகேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக அண்மைய காலமாக பெரிதும் எதிர்பார்ப்பட்டது.

எனினும், அவர் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்திற்கான ஆளுநர் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button