செய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் இராஜிநாமா…

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

டிசம்பர் 20 ஆம் திகதி முதல் அமுலாகும் தாம் இராஜினாமா செய்வதாக,கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக மத்திய வங்கியின் தெரிவித்துள்ளார்.

இது தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவு எனவும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download