செய்திகள்

மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறு இலங்கை வாழ் முஸ்லிம் மக்களிடம் பிரமதர் கோரிக்கை.!

ஈதுல் பித்ர் நன்னாளில் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் இன்று எதிர்கொள்ளும் கொவிட் 19 பேரழிவில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நோய்த்தொற்று நிலைமைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக ரமழான் காலத்தைப் பயன்படுத்திக்கொள்வது பயனுடையது எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நோன்பு காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களுக்கு செல்லாது தமது வீடுகளில் இருந்தவாறு சமய சடங்குகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

முழு உலகமும் இவ்வாறானதொரு தொற்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறும் பிரமதர் தமது வாழ்த்து செய்தியூடாக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் அனைவருக்கும் இன்றைய ஈதுல் ஃபிதர் திருநாள் இறை ஆசீர்வாதத்துடனான, நோய் அச்சமற்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறந்த நாளாக அமைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மத ரீதியான முறையான போதனைகளை கற்ற, ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக தாம் புரிந்துகொண்டுள்ளதை இன்று போன்றதொரு தினத்தில் நினைவுபடுத்துவதாகவும், ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com