சமூகம்
மனித கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது
ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மனித கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்டகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி ஹிக்கடுவை தபால் காரியாலயத்தின் அருகாமையில் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவரை சுட்டு கொலை செய்யப்படிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெல்வத்த பிரதேசத்தினை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், அவரிடம் இருந்து டி 56 ரக துப்பாக்கி ஒன்றுபொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்படுகின்றது.