செய்திகள்

மன்னாரிலிருந்து முதலாவது பெண் விமானி எவாஞ்சலின்!

மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானியாகுவதற்கான முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக கடந்த 2020ஆம் திகதி ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து முதல்கட்ட பயிற்சியினை நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவுசெய்து விமானியாகவுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button