செய்திகள்

மன்னாரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில்

மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை கடந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த மாவட்டத்திற்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகள் இன்று முதல் 30 வயதிற்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிறந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button