செய்திகள்

மன்னாரில் மின்னல் தாக்கம் 03 வீடுகளுக்கு சேதம் ..?

மன்னாரில் இன்று திங்கட்கிழமை(7) அதிகாலை முதல் கடும் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் மன்னாரில் உள்ள 3 வீடுகள் மீது மின்னல் தாக்கியதில் வீடுகளின் உடமைகள் சேதமாகியுள்ளது.

-இதன்; போது மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடிகள் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

-இதன் போது குறித்த வீடுகளில் உள்ள பெறுமதி மிக்க மின் சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளது.

அத்தோடு வீட்டு பகுதியில் உள்ள தென்னை மரங்கள் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் உடமைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள போதும்,உயிர் ஆபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை.

மின்னல் தாக்கத்தின் அதி கூடிய சத்தத்தினால் குறித்த வீடுகளில் இருந்த சிறுவர்கள் உற்பட அனைவரும் மன அலுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார்,இராணுவத்தினர்,பிரதேசச்செயலக அதிகாரிகள்,மாவட்டச் செயலக அதிகாரிகள்,அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதீக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டனர்.

மன்னார் செய்தியாளர் .ஜோசப் நயன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com