...
செய்திகள்

மன்னாரில் 470 பேருக்கு கொவிட்!

கடந்த 23 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 470 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி முதல் நேற்று (23) வரை குறித்த கொவிட்தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொதுமக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் கொவிட்தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen