...
செய்திகள்

மன்னார்- அருள்மிகு திருக்கேதீஸ்வரம் திருக்கோயில்..

 
திருக்கேதீஸ்வரப் பதியமர்ந்த திருவருளே சிவனே
திசையெங்கும் நல்லருளைப் பரப்பிடவே செய்வாய்
அன்னை கௌரியுடன் உறையும் சிவனே
ஆறுதலைத் தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா
மன்னார் தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் சிவனே
மதிதனிலே நல்லறிவை நிலைபெறவே செய்வாய்
கௌரவமாய் நாம்வாழ வழியமைப்பாய் சிவனே
நம் குலம் வாழ ஏற்றவழி காட்டிடுவாய் ஐயா
பாலாவி தீர்த்தத்தில் தீர்த்தமாடும் சிவனே
பட்டதுன்பம் துடைத்தெறிந்து வாழவைப்பாய் ஐயா
கேட்டவரம் தவறாது தந்தருளும் சிவனே
கொடுமை களைந்தெம்மை காத்திடுவாய் ஐயா
சம்பந்தரால், சுந்தரரால் பாடல் பெற்ற சிவனே
வரலாற்றில் நம்பெருமை பேணிடுவாய் ஐயா
தமிழரசர் ஆட்சியிலே சிறப்படைந்த சிவனே
பழைமை கொண்டவுன் பெருமை மிளிர வேண்டுமய்யா
மாதோட்ட நன்னகரில் கோயில் கொண்ட சிவனே
மாண்புநிறை வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா
அருள் பொங்கும் திருவிடத்தில் அமர்ந்தருளும் சிவனே
மகிழ்வுடனே நாம் வாழ அருளிடுவாய் ஐயா 
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் சிவனே
தயங்காது எம்முரிமை உறுதி செய்வாய் ஐயா 
பாரினிலே நம்பெருமை ஒளிர வேண்டும் சிவனே
பார்போற்ற நாம் வாழ வழியமைப்பாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen