செய்திகள்

மன்னார் ஆண்டாங்குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

 

மன்னார் ஆண்டாங்குளம் கிராமத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்தி வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி , மடு பூ மலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட மடு 3 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் மிகவும் உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மடு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை(1) மாலை தகவல் கிடைத்த நிலையில் மடு பொலிஸார் சடலத்தை சென்று பார்வையிட்டனர்.

-இந்த நிலையில் குறித்த சடலத்தை பார்வையிட்ட காணாமல் போன குடும்பஸ்தரின் உறவினர்கள் , சடலத்தை பார்வையிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என்பதனை உறுதி படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மடு பொலிஸார் , கிராம அலுவலகர் மற்றும் விசேட தடவியில் நிபுனத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு,மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

-(படம்)
-மன்னார் நிருபர்- ஜோசப் நயன்
(02-12-2017)

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button