...
செய்திகள்

மன்னார், இலுப்பைகடவை பகுதியில் நேற்றைய தினம், இருவர் கைது

மன்னார், இலுப்பைகடவை பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 131.725 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்பரப்பிலும் அதன் கடலோர எல்லையிலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ரோர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந் நிலையில் நேற்று மன்னார் இலுப்பைகடவை பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் காவல்துறையின் உதவியுடன் மீன் பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்ட லொறியொன்றை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி கஞ்சா தொகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 39 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி பகுதியில் வசிக்கும் 36 மற்றும் 40 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், கஞ்சா மற்றும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen