செய்திகள்

மன்னார்- உப்புக்குளம் சித்திவிநாயகர் திருக்கோயில்..

 
சித்திகள் வழங்குமெங்கள் செல்வக் கணபதியே
சத்தியத் திருவுருவே சங்கடந் தீர்ப்பவனே
நத்தியடி பணிவோர் நலங்களின் காவலனே
முத்தி தரவென்று மன்னார் அமர் மாமணியே
அண்டிவரும் அடியார்க் காறுதல் நீயல்லவோ
ஆண்டியாய் நின்றிருந்த அழகனுக்கு மூத்தவனே
வேண்டுவதுன் வரமே வேதனை நீங்கிவிட
மண்டியிட்டே துதித்தோம் மன்னார் கணபதியே
மன்னார் திருவிடத்தில் மாண்புற வீற்றிருந்து
இன்னல் களைந்தெம்மை இனிதாய் வாழவைப்பாய்
உன்னால் எம்வாழ்வு ஏற்றமடைந்திடவே
மன்னனே மனமிரங்கி அருள்தர வந்திடய்யா
தும்பிக்கை கொண்டவனே துணையையே தந்திடுவாய்
நம்பிக்கை கொண்ட எம்மை நாதனே காத்திடுவாய்
வம்பு, வதை செய்து நம் வாழ்வைச் சிதைப்போரை
நெம்பி அகற்றிவிட்டு நிம்மதியைத் தந்திடய்யா
மன்னார் திருப்பதியில் திரு விளக்காய் அமர்ந்தவனே
உன்னாலே நாமென்றும் உயர்ந்து, உய்திபெற
இன்பமே நிலைத்து எங்கும் உண்மையும் சேர்ந்துவிட
ஈன்று விடு பெருங்கருணை சித்தி விநாயகனே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button