ஆன்மீகம்

மன்னார்- நானாட்டான் அருள்மிகு செல்வ முத்துமாரியம்மன் திருக்கோயில்…

நானாட்டான் கோயில் கொண்ட மாரியம்மா
நம் சுற்றமெல்லாம் நலம் பெறவே துணையிரம்மா
மாசற்ற அன்புநிறை செல்வ முத்துமாரியம்மா
மாண்புடனே வாழவழி தந்திடம்மா

புண்ணியர்கள் போற்றுகின்ற பேரருளே
புவனமெங்கும் காவல் செய்ய வந்திடம்மா
பாசமுடன் அணைத்தருளும் செல்வ முத்துமாரியம்மா
பாதகங்கள் போக்கியெமைக் காத்திடம்மா

மன்னார் பெருநிலத்தில் வீற்றிருக்கும் திருமகளே
ஆதரித்து அரவணைக்க வந்திடம்மா
எங்களுக்கு வாழ்வளிக்கும் செல்வ முத்துமாரியம்மா
ஏற்றம் பெற கருணையுடன் வந்திடம்மா

பாரினுக்கே பசிபோக்கும் தூயவளே
பாதையினைச் சீராக்க வந்திடம்மா
செல்வங்களுக் கதிபதியான செல்வ முத்துமாரியம்மா
செம்மைமிக நன்னிலையைத் தந்திடம்மா

வழிகாட்டி நெறிப்படுத்தும் நாயகியே
கண்திறந்து பார்த்தருள வந்திடம்மா
அறிவுதந்து ஆற்றல் தரும் செல்வ முத்துமாரியம்மா
அச்சமின்றி வாழவழி தந்திடம்மா

மனவுறுதி தந்தருளும் மாமணியே
மகிழ்வான எதிர்காலம் அமைத்திடம்மா
வலிமை தந்து வாழ்வளிக்கும் செல்வ முத்துமாரியம்மா
வாழ்க்கைக்கு ஒளியேற்றிவிட்டிடம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button