செய்திகள்

மன்னார் பள்ளிமுனையில் நில அளவீடு செய்யப்பட்டள்ளது.

 

கடற்படையினர் நிலை கொண்டுள்ள மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணி கடந்த வியாழக்கிழமை (07.12.2017) மதியம் நில அளவீடு செய்யப்பட்டள்ளது.
குறித்த மக்களின் காணிகள் தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழங்கின் அடிப்படையில் ஏற்கனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள பள்ளிமுனை கடற்படை முகாம் 2 ஏக்கர் இரண்டு பரப்பு   நிலப்பரப்பு காணியில் அமைந்துள்ளமையினால் அதற்கு சொந்தமான குடியிறுப்பாளர்கள் பள்ளிமுனை காணி தொடர்பில்; ஏற்கனவே மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
-குறித்த காணி தொட்பாக வழக்கு விசாரனைகள் தொடர்ச்சியாக மன்னார் நீதிமன்னறத்தில் இடம் பெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக இனக்கப்பட்டின் அடிப்படையில் இன்று  வியாழக்கிழமை(7)குறித்த கடற்படை முகாம் நில அளவீடு செய்யப்பட்டது.
நில அளவீடு இடம் பெற்ற குறித்த பகுதிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன், நில அளவைத்திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகர்களும், பள்ளிமுனை பங்குத்தந்தை, மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், கடற்படையினர்,  மற்றும் வழக்காளிகளும், பள்ளிமுனை மக்களும்  அப்பகுதியில் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதி நில அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டு நில அளவீடுகள் நிறைவடைந்துள்ளது.
மீண்டும் குறித்த பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரனை எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 20 ஆம் திகதி (20-02-2018) மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(படம்)
-மன்னார் நிருபர்- ஜோசப் நயன்

Related Articles

67 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button