...
செய்திகள்

மன்னார்- மாந்தை மேற்கு வண்ணாகுளம் அருள்மிகு அம்பாரவேல் பிள்ளையார் திருக்கோயில் 

அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் ஐயா 
அன்பு கொண்டோர் உள்ளங்களில் உறைந்திருப்பாய் நீயே
மன்னார் பெருநிலத்தில் மாந்தையிலே கோயில் கொண்ட ஐயா
மறமழிந்து அறம் அருளிடவே வருவாய் 
அம்பாரவேல் பிள்ளையாரென்ற பெயர் கொண்ட ஐயா 
அமைதி நிலை வாழ்வுக்குத் துணையிருப்பாய் நீயே 
யாழரசர் ஆண்ட மண்ணில் எழுந்தருளும் ஐயா
மருள் போக்கி வலிமை பெற கருணை செய்ய வருவாய் 
வண்ணாகுளவூரமர்ந்து அருள் வழங்கும் ஐயா 
வாழ்வுக்கு ஒளியேற்றி வாழவைப்பாய் நீயே 
குஞ்சரத்தின் முகங்கொண்டு காவல் செய்யும் ஐயா 
குறையின்றி வாழ வழி தந்திடவே வருவாய் 
வயல் சூழ்ந்த வளநிலத்தில் இருந்தருளும் ஐயா 
வற்றாத ஒழுக்கமுடன் வாழச்செய்வாய் நீயே 
இந்நாட்டில் நிம்மதியாய் வாழச்செய்வாய் ஐயா 
எந்நாளும் உடனிருந்து  அருள் தரவே வருவாய் 
இயற்கையெழில் நிறைந்த மண்ணில் வளம் சேர்க்கும் ஐயா 
இன்பநிலை தழும்பாது வாழ வைப்பாய் நீயே 
கேட்ட வரம் கொடுத்து நல்லாற்றல் தரும் ஐயா 
கொடிய பகை நெருங்காது அரணமைக்க வருவாய் 
பிள்ளையாரே என்றழைக்க விரைந்தருளும் ஐயா 
உற்றவர்கள், ஊரவர்கள் நலன் காப்பாய் நீயே 
உன் பாதம் சரணடைந்தோம் காத்திடுவாய் ஐயா 
வழிகாட்டி உறுதுணையாய் இருந்தருள வருவாய். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen