செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்களும், பரிசோதகர்களும் இன்று(19) பணிப்புறக்கணிப்பொன்றினை முன்னெடுத்திருந்தனர்.மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறு கோரி இன்று முற்பகல் முதல் மதியம் வரை அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருந்தனர்.

2020 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் முதல் இந்த வருடத்தின் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை தாமதமின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button