மன நோயாளியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது
மஸ்கெலியா – ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் வலது குறைந்த மன நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டோக்ஹோம் தோட்ட பெரிய சோலகந்தை பிரிவை சேர்ந்த 33 வயதுடைய வலது குறைந்த மன நோயாளியான நல்லையா ராம்குமாரை கடந்த 13ஆம் திகதி இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சமீப காலமாக தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளமையால் இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பரிசோதனையில் நபர் கொலை செய்யப்பட்டமை உறுதி படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் பணிப்புரையில் உதவி பொலிஸ் அதிகாரி ஆனந்த மற்றும் பொலிஸார் அடங்கிய குழு இன்று காலை முதல் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை சம்வத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்களை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.