செய்திகள்மலையகம்

மரங்கள் முறிந்து விழுந்ததில் தோட்ட குடியிருப்புகள் சேதம்.!

இரத்தினபுரி – பெல்மதுல்லை ரில்ஹேன தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த அனர்த்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான முதற்கட்ட உதவிகளை ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.திருச்செல்வம் முன்னெடுத்து வருகின்றார். குறித்தத் தோட்டத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் பாரிய மரங்கள் காணப்படுவதாகவும் இதனால் மழைக்காலத்தில் மிகுந்த அச்சத்துடனேயே வாழ வேண்டியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆபத்துமிக்க மரங்களை அப்புறப்படுத்துமாறு தோட்ட நிர்வாகத்துக்கும் கிராம சேவகருக்கும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– eelanadu –

Related Articles

Back to top button