செய்திகள்

மரண தண்டனை கைதிகள் மீண்டும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்.!

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கின்றது. நேற்று உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட கைதிகள் மீண்டும் கூரைமீது ஏறி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலையின் ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்றும் உணவைப் பெற்றுக்கொள்ளாது கைதிகள் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கூரைகள்மீதேறி ஆர்ப்பாட்டம் செய்து சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற வகையில் செயற்படும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button