சமூகம்
மரண வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய சகோதர்களுக்கு இப்படி ஒரு நிலையா?
நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வெருகல் மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் (வயது 21) மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரனான சின்னவன் வசந்தராஜ் (வயது 22) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் பயணித்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி மின்கம்பத்தில் மோதுண்டு பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம்பற்றி சேருநுவர பொலிஸார் விசாரணைகளில் முன்னெடுத்துள்ளனர்.