தொழில்நுட்பம்

தமிழ் மொழி மூலமான புதிய தொழில்நுட்பக் கற்கை நெறிகள்! இன்றே பதிவு செய்து பட்டதாரியாகும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள்

இலங்கையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் கொழும்பு 10 மருதானையில் அமைந்துள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக 10 இற்கும் மேற்பட்ட தமிழ் மூல பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில பாடநெறிகளுக்கு தரம் 9 சித்தியடைந்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். அத்துடன் படிமுறையாக அடுத்தடுத்த கட்டங்களை நிறைவு செய்வதன் மூலம் பட்டதாரியாகும் வாய்ப்பும் கிடைக்கிறது.

விண்ணப்பங்களை www.dtet.gov.lk என்ற இணையத்தின் ஊடாக பூரணப்படுத்தி அனுப்பலாம்.

முழு நேர கற்கைகளை தொடரும் மாணவர்களுக்கு தமது குடும்பவருமான நிலைமைகளிற்கேற்ப வகுப்புக்களிற்கு சமூகமளிக்கும் நாளொன்றிற்கு 50 வீதம் மாணவர் உதவிக் கொடுப்பனவானது மாதம் ஒன்றிற்கு 1000/- இற்கு மேற்படாது வழங்கப்படும்.

சகல முழுநேரக்கற்கை நெறி மாணவர்களுக்கும் தேவையான அளவு கட்டணத்தில் பருவகால சீட்டுக்கள் வழங்கப்படும்.

NVQ 3 / 4 பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்கள் NVQ 5 பாடநெறிக்கான தகைமைகளைப் பெறுவதோடு NVQ 5 பாடநெறியில் சித்தியடைந்தவர்கள் UNIVOTEC இல் தொழில்சார் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பைத் தொடருவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வர். சகல கற்கை நெறிகளிற்கான வயதெல்லை 17 – 29 ஆகும்.

இலங்கை தொழில்நுட்பவியல் கல்லூரி, மருதானை, கொழும்பு 10

தொ.பே: 0112324177, 0112423653

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button