செய்திகள்

மருந்து தட்டுப்பாட்டுக்கு 6 வாரங்களுக்குள் தீர்வு-சுகாதார அமைச்சு

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான 14 மருந்து வகைகள் தேவையான அளவு கையிருப்பிலுள்ளது. அத்தோடு 186 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அவற்றை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button