மலையகம்

மருமகனோடு சேர்ந்து மகனை கொலை செய்த தந்தை பொகவந்தலாவில் சம்பவம்

 

பொகவந்தலாவ, பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று வியாழகிழமை இரவு இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில், தந்தையும் மருமகனும் இணைந்து தடியால்  தாக்கியமை காரணமாக மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தந்தையும் மருமகனும் இணைந்து குறித்த நபரை தலைப்பகுதியில் கடுமையாக தாக்கியமையால் அதிகமான இரத்தம் வெளியேறிமையின் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிர் இழந்தவர் 37வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணையின் பின்னர் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button