மலையகம்

மர்மமாகவே சடலங்களாக நாடு திரும்பும் மலையக பெண்கள்

 

தொழில் நிமிர்த்தம் சவுதி அரேபியா தமாம் நகரிற்கு வேலைக்குச் சென்ற பணிப்பெண் ஒருவரின் சடலம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது .அச்சடலமானது கடந்த 08ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது .

குறிப்பிட்ட சடலம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் என குறிப்பிடப்படுகின்றது . இவர் 1995 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.எனினும் .கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இவர் உயிரிழந்ததாக அவரது மகன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு அறிவித்துள்ளார் .

இதன்படி அவரது உடலை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.மேலும் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பெண்ணின் உறவினர்கள் விமான நிலைய காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ள்ளனர்.

தொடர்ந்தும் வறுமை நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் மலையக பெண்கள் இவ்வாறு சடலங்களாக கொண்டு வருவது மன வேதனைக்குறிய விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button