உலகம்
மர்ம காய்ச்சலால் 85இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

இந்தியாவின் பரவும் மர்ம காய்ச்சலால் கடந்த 45 நாட்களில், சுமார் 85இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குறித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது.
மாநிலத்தின் பாராய்ச் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயினால் 450 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்தக் காய்ச்சல் பரவுவதாகவும் சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.