செய்திகள்

மற்றுமொரு கொரோனா மரணம் நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மற்றுமொரு கொரோனா மரணம் நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அகலவத்தையைச் சேர்ந்த 60 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோயாளர்கள் 588 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொட கொத்தணியைச் சேர்ந்த 388 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்த 18 பேரும் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 39 ஆயிரத்து 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

Related Articles

Back to top button