செய்திகள்

மற்றுமொரு ஜனாதிபதி செயலணி ஸ்தாபனம்.

(ராகவ்)

நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி என இந்த செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான பெசில் ராஜபக்ஸவின் தலைமையில் இந்த செயலணி இயங்கவுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் ஐவரும் ஆளுநர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர்கள் 14 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 46 பேர் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய சுற்றாடலை பாதுகாப்பதற்காக மேலும் 24 விடயங்கள் தொடர்பில் இந்த ஜனாதிபதி செயலணி கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com