கட்டுரைமலையகம்

மலயைகத்தின் எதிர்கால சொத்துக்கள் இரண்டை அள்ளுண்ட டொரிங்டன் அலுப்புவத்தை நீரோடையும் பாலமும்.

அலுப்புவத்தை தோட்டத்தை சூழ உயரமான காடுகளை கொண்ட மலைகள்.அதன் கீழ் தேயிலை மலைகளும் விவசாய நிலங்களும் உள்ளன.உயரமான மலையிலிருந்து ஊற்றெடுத்து பாயும் பிரதான நீரோடையும் உள்ளது.இந்த நீரோடை அலுபுவத்தையில் இருந்து் டொரிங்டன் தோட்டத்துக்கு செல்லும் வழியை ஊடுறுத்து செல்கிறது. அந்த நீரோடையின் மேலே கொங்ரிட் இடப்பட்ட பாலம் இருக்கிறது.பாலத்தக்கு கீழே நீரை கொண்டு செல்ல சிறியளவான குழாயே பொறுத்தப்பட்டுள்ளது.பாலத்தின் இரு பக்கமும் பாதுகாப்பான வேலிகள் ஏதும் கிடையாது.

மழைக்காலங்களில் அள்ளுண்டு வரும் மண் மற்றும் குப்பைகளினால் இந்த குழாய் அடைத்து நீர் பாலத்துக்கடியில் செல்ல வழியில்லாமல் பாலத்தின் மீது, பாலத்துக்கு மேலாக செல்லும்.அடை மழை பெய்யும்போது இன்னும் வேகமாக நீர் செல்லும்.அதிலே நடந்து போய் வருவதும் வழக்கமாக இருந்துள்ளது.அப்படி அடைபட்டு கிடக்கும் குப்பைகளை அள்ளுவதும் உடனே நடைபெறாது.காலநிலை சீரானதும் பின்னரே முன்னெடுக்கப்படும்.அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

அனர்த்தம் இடம்பெற்ற (18-07-2019) நாளன்று பெய்த அடை மழையால் வந்த வெள்ளம் பாலத்துக்கு மேலே போக அவ்வழியால வந்தகுறிபிட்ட மாணவர்கள் இருவரும் ஆழம் அறியாது பாலத்தை கடக்க எத்தனித்த போதே இ்ந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பாதையை் அலுப்புவத்தை மற்றும் டொரிங்டன் தோட்ட மக்களும்
டொரிங்டன் தோட்ட நிர்வாகமும் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற அதேவேளை அலுப்புவத்தையில இருந்து் நு/டொரிங்டன் த.வி க்கு செல்லும் பாடசாலை மாணவர்களின் இலகுவான வழியும் பிரதான வழியும் இதுவே.முதலாம் தர மாணவர்கள் முதல் ஒன்பதாம் தர மாணவரகள் வரை இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.

பாதை புனரமைப்பு பற்றிய விமர்சனம் பொதும்கள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் சுமத்தப்படுகின்ற அதேவேளே இந்த பாதையை பயன்படுத்தும் தோட்ட நிர்வாகத்திற்கும் பெரும் பங்கும் பொறுப்பும் உள்ளது.தோட்ட நிர்வாகம் கவனம் எடுத்திருக்க வேண்டும்.பாலத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பான வேலிகள் இருந்திருந்தாலும் கூட இந்த குழந்தைகள் காப்பாற்ற பட்டிருக்கும்.

நு/டொரிங்டன் தவி இலிருந்து அலுப்புவத்தைக்கு 2km தூரம் இருக்கும் அதற்கிடையில் இவ்வாறான பாதுகாப்பற்ற பாலங்கள் நான்கு உள்ளமையையும் சுட்டி காட்ட வேண்டும்.

இந்த இரு மாணவச்செல்வங்களின் இழப்பு பெருந்தோட்டங்களில் உள்ள ஏனைய மாணவர்களின் பாதுகாப்பையும் பாதை மற்றும் பாலங்களின் புனரமைப்பையும் வலியுத்தி சென்றுள்ளது.

அ.ரெ.அருட்செல்வம

Related Articles

Back to top button
image download