கவிதை

மலைகளின் ஊரே..!

நாட்டு மலர் நறு வெளியில்
நாண நதி அவிழும் சீமை
தோட்டம் நிலம் யாவருக்கும்
சொந்த மழை பெய்கிறது

உச்சி வரை மலை வெளியில்
ஊரிருக்கு வானத்திலும்
கொட்டி வந்த இரத்தக்கறை
சீமையெல்லாம் சிரிக்கிறது

பச்சையரிசி சம்பா நெல்லு
மாரியம்மன் கோயில் மணி
ஆண்ட கூட்டம் மீண்டு வர
ஆரிராரோ பாடிவரீர்

உழைக்கும் கரம் நன்கிருந்தும்
உண்மையில்லா தேசமெல்லாம்
அன்ன நடை போட்டு வர
எழுந்து சனம் நிமிர்ந்து வரீர்

கலை வளர்க்கும் கூத்தர்களும்
மலை செழிக்கும் பாதங்களும்
முதுகெலும்பாய் மாறிவிட
வீறு கொண்டு மகவலியாய் பாய்கிறது

மாடசாமி கந்தசாமி
பொன்னியம்மா வள்ளியம்மா
வாழ்ந்த சீமை மாறிப் போக
மலையின் மக்கள் ஆட்சி சூழும்

நெஞ்சமெல்லாம் வஞ்சமில்லா
வள்ளல்களின் வாசமெல்லாம்
மலைவெளியில் வீசக்கண்டேன்
நெஞ்சமெல்லாம் நெருடல் கொண்டேன்

என்.நிலவிந்தன்
வவுனியா

Related Articles

Back to top button