மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பரிசளிப்பு விழா
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மற்றும் கனடா தாய்வீடு சஞ்சிகை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மலையக் கல்விமானும் சமூக செயற்பாட்டாளருமான அமரர். எஸ். திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இம்மாதம் 26 ஆம் திகதி ஞாயிறன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறும்.
மன்றத்தின் தலைவர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் இடம்பெறும் இவ் விழாவில் மல்லிகைப்பூ சந்தித் திலகர் (பா.உ) பிரதம அதிதியாக கலந்துக் கொள்கிறார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். தாயுமானவன், எழுத்தாளர் மொழிவரதன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே. மெய்யநாதன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவக்குமாரன், எழுத்தாளரும் ஆய்வாளருமான எஸ். தவச்செல்வன், ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் பி. ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
அறிமுகவுரையை எம். வாமதேவன், ஆலோசகர் (தோட்ட உட்கட்டமைச்சு) போட்டிக்கு வந்த சிறுகதைகள் மற்றும் கவிதைகள் பற்றிய ஆய்வுரைகளை முறையே மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம், சு.முரளிதரன் (கவிஞர், கல்விப் பணிப்பாளர்) ஆகியோர் நிகழ்த்த கருத்துரையை ஜி.சேனாதிராஜாவும் (இணைச் செயலாளர். ம.எ.ம ) வாழ்த்துரையைக் கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவாவும் நிகழ்த்துவார்.
மற்றும் வரவேற்புரையை கவிதாயினி லுனுகலை ஸ்ரீயும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் நன்றிவுரையினை மன்றத்தின் இணைச்செயலாளரான இரா. சடகோபனும் மேற் கொள்கின்றனர்.
இன்றைய பேஸ்புக் பதிவு -சடகோபன் ராமையா
https://www.facebook.com/shadagopan?hc_ref=ARQlg2xRQjiqd7Ox5Repvc0wGxTYF_JhTEHFuu5HwGvMoVjL15C8uiQMj-Z2C_UkM7E&fref=nf