...
சமூகம்செய்திகள்மலையகம்

‘மலையகத்தின் உரிமைக்குரல்’ அமைப்பின் 50வது வேலைத்திட்டம் பெல்மோரல் பாடசாலையில் நடைபெற்றது.

மலையகத்தின் உரிமைக்குரல்‘ அமைப்பின் 50வது செயற்திட்டமானது இன்றைய தினம் (2022.01.02) நு/பெல்மோரல் தமிழ் வித்தியாலயத்தில் செவ்வனே இடம்பெற்றது.

மலையகத்தில் பிறந்து வளர்ந்து வெளிநாடுகளில் உழைக்கும் உறவுகளின் வினைதிறன் மிக்க முயற்சியின் பேரில் இந்நிகழ்ச்சி திட்டங்கள் நடைபெறுகின்றது.

இலங்கை எங்கள் தாய்நாடு மலையகம் எங்கள் தாய்வீடு என்ற குறிக்கோளோடு பயணிக்கும் மலையகத்தின் உரிமைக்குரல் அமைப்பானது இதுவரையில் 49 வேலைத் திட்டங்களை சிறப்பாக செய்தது மட்டுமன்றி ஆண்டின் தொடக்கத்தில் தனது 50வது திட்டத்தை செய்திருந்தனர்.

அந்தவகையில் நண்பகல் 1 மணியளவில் ஆரம்பான இந்நிகழ்வில் விசேட அதிதிகளை தீபமேற்றி வரவேற்றதுடன் மலர் மாலைகள் அணிவித்து கௌரவப்படுத்தினர்.

மேலும் மங்கள குத்துவிளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்கள் ஆடல் பாடல் என அரங்கை அதிரச் செய்தனர். அதுமட்டுமின்றி மலையகத்தின் உரிமைக்குரல் சார்பில் பங்குபற்றிய உறுப்பினர்களும் கலைநிகழ்ச்சிகள் செய்து மாணவர்கள் உற்சாகமடைய செய்தது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வின் போது தரம் 01 தொடக்கம் 05 வரையான சகல மாணவர்களுக்கும் புத்தகப்பை கொப்பிகள் என பெறுமதி மிக்க பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதன்போது சுயத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக சுசிலா என்பவரின் குடும்பத்திற்கு 40,000/= காசோலை வழங்கிவைக்கப்பட்டது. இந்த வருடத்தில் இருந்து மலையகத்தில் உரிமைக்குரல் அமைப்பானது பாடசாலைகளையும் மாணவர்களையும் மையப்படுத்தி தனது வேலைத்திட்டங்களை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்களை நீங்கள் காணலாம்.

ஆர்கே கவிஷான்

Related Articles

Back to top button


Thubinail image
Screen