சிறப்புமலையகம்

மலையகத்தின்   முதலாவது பெண் பேராசிரியர் (யை).கலாநிதி ராஜலட்சுமி சேனாதிராஜா

முதலாவது பெண் பேராசிரியர்

அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 22. 12. 2020 தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் முகாமைத்துவத்தில்(professor in management )
பேராசிரியராக
பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

மலையக மக்களின் முதலாவது பெண் பேராசிரியர் (யை) என்பதுடன்
முகாமைத்துவத் தில் முதலாவது பேராசிரியரும் ஆவார். கொழும்பு பல்கலைக்கழக
முகாமைத்துவ நிதி
பீடத்தின் முதலாவது பெண் பீடாதிபதியாகவும் , கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல தடவைகள் பதில் உபவேந்தராகவும் சிறப்பாக கடைமையாற்றிவர் என்பது கூடுதல் சிறப்பு.
பல ஆங்கில நூல்களை எழுதி
இருப்பதுடன் மலையக இலக்கியத்திற்கு
“மழைக் குழம்புகளின் வர்ணங்கள்” என்கிற கவிதை
தொகுப்பு இவரின்
பங்களிப்பாகும்.
தற்போது , “இந்திய
(மலையக ) முயற்சியாளர்களின் வியாபார
தந்திரோபாய ங்களும் கலாசார
தாக்கமும்” எனும்
நூல் ஆங்கிலத்திலும்
தமிழ் மொழியிலும் வெளிவரவிருக்கிறது.
கொழும்பு தமிழ்
சங்கத்தின் ஆயுட் கால உறுப்பினராகவும்
ஊவா அறவாரியம், மலையக கல்வி
அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினராகவும் ஆலோசகர்களில்
ஒருவராகவும் இருந்து வருகிறார்.
தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ நிதி பீடத்தில்
( Faculty of management and finance) முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றுகிறார்.
45

Related Articles

Back to top button