மலையகம்

மலையகத்திலிருந்து சென்றும் செல்வந்தர்களாக இருப்பவர்கள் அவர்களின் ஊர் பக்கம் கொஞ்சம் திரும்பி பார்த்தலே போதும் கல்வியில் பாரிய மாற்றம் வரும் .ஐ. வி. ஸ்.விஜயன்

புசல்லாவை ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு கடந்த காலங்களில் பல கல்வி தொடர்பான சேவைகளை புசலாவை பகுதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புலமை பரிசில் பரீட்சைக்கு வருடம் தோறும் தோற்றும் மாணவர்களுக்கு மாதந்தோறும் கருத்தரங்குகளுக்கான வினாத்தால்களை வழங்குவதோடு ,வருட இறுதியில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசல்களை வழங்கி ஊக்குவியப்பதோடு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதன் போது கௌரவப்படுத்துவது சிறப்பம்சமாகும்.

புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது உயர்தரம்,சாதாரண தரம் முதல் பல்கலை கழகம் வரையான மாணவர்களுக்கும் பல புலமை பரிசில் திட்டங்கலை இந்த புசல்லாவை ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில் கொத்மலை வலயத்திலுள்ள42 பாடசாலைகளின் 1300 மாணவர்களுக்கும் ,கம்பளை வலயத்திலுள்ள 28பாடசாலைலுள்ள 700 மாணவர்களுக்கும் அடுத்தமாதம் நடை பெறவுள்ள புலமை பரிசில் பரீட்சையில் பயன் பெரும் வகையில் இறுதி கருதங்ககுகளை ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு. குறித்த பிரதேச பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தொடர்ந்து இந்த பிரதேசத்தில் கல்வியை முன்னேற்ற ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பு கண்டிப்பாக முன்னிற்கும் என வாக்குறுதி வழங்கினார்கள்.

அமைப்பின் பிரதான காரியவானான ஐ.வி.ஸ்.விஜயன் குறித்த பகுதியில் ஒரு தோட்ட தொழிலாளியின் பிள்ளையாக பிறந்து கொஞ்சம், கொஞ்சமாக உழைத்து இன்று கொழும்பில் AB ட்ரவல்ஸ் என்ற வியாபாரத்தின் மூலம் தன்னை உயர்த்தி கொண்டு தான் சார்ந்தவர்களையும் உயர்த்திட வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு ஸ்ரீ கல்கி மாணவ சேவா அமைப்பினுடாக பல லட்சம் ரூபாய்களை கல்விக்காக முதலீடு செய்து வருகின்றார். அவர் இந்த சேவை பற்றி குறிப்பிடும் போது நான் புசல்லா பகுதியில் செய்வது போல அந்த அந்த ஊரிலிருந்து போய் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருப்பவர்கள் அவர்களின் ஊர் கல்விக்காக முன்வரவேண்டும் அப்டி வருகின்ற நேரம் மலையகத்தில் கல்வி துறையில் பாரியதொரு முன்னேற்றத்தை காணலாம் என குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button