மலையகம்

மலையகத்திலிருந்து வருடத்திற்கு 2000 பேர் பல்கலைக்கு உள்வாங்கப்பட வேண்டும்-பேராசிரியர் தனராஜ் தெரிவிப்பு.

மலையகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கையில் சற்று அதிகரித்த போதிலும் நாம் அது குறித்து திருப்தி அடைய முடியாது. இம்முறை இலங்கையிலுள்ள 16 பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க சுமார் 1,80,000 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.அதில் இந்த பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 30,000 பேரையே உள்வாங்குகின்றனர்.

அதில் இவ்வருடம் சுமார் 500 மாணவர்கள் மலையகப் பகுதியிலிருந்து சென்றுள்ளனர். இதில் அதிகரிப்பு காணப்பட்டாலும் நாம் திருப்தி அடைய முடியாது.காரணம் எமது மலையக சனத்தொகைக்கேற்ப சுமார் 2000 மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என பேராசிரியரும் நன் நம்பிக்கை கல்வி நிதியத்தின் செயலாளருமான பேராசிரியர் தனராஜ் தெரிவித்தார்.

மலையகப்பகுதியில் தோட்டப்பகுதியிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைகலகத்திற்கு தெரிவான நாற்பது மாணவர்களுக்கு புலமை பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு மலையகத்தில் உள்ள நன் நம்பிக்கை கல்வி நிதியத்தினால் நேற்று ( 12) திகதி ஹட்டன் வெப்ஸட்டார்,சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது.

நன்றி மலை நாடு

Related Articles

Back to top button